மொழியில்லை இனமில்லை
சாதியில்லை மதமில்லை
நாடில்லை மாநிலமில்லை
நிறமில்லை நிகரில்லை
அன்பிற்கு
எனக்கு மனிதனை போல் மூளையில்லை
எனக்கும் கண்ணும் இதயமும் உண்டு
அன்பு கண்ணில் பார்த்து இதயத்தில் உணர்வது
இயற்கையன்னையின் ஈடிலா இரு உயிர்கள் நாம்
இவ்வுலகி நாம் படைத்திடும் போது
நீ குழந்தையாய் நான் நாயாய்
ஆனாலும் நமக்கு ஒரே மொழி அது அன்பு
என்னில் என் இதயம் துடிதுகொண்டிருகும் வரை
உன் அன்புக்கு நன்றியுடன் நானிருப்பேன்
அது நின்ற பின்னும் என் அன்பு இருக்கும்
என்னை போல் இன்னொரு நாயிடம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக