வீரமாகவும் பெண் கொடுத்தார்கள் நன்று
அவளையே அவள் விலை பேசி விற்கிறாள் இன்று...
முன்பெல்லாம்
பெண்ணை திருமணம் செய்யும் மணமகன்
விலை போவான் ....வரதட்சணை என்கிற பேரில்......
நவீன கால நங்கைகள் நாங்களும் உங்களுக்கு
சளைத்தவர்கள் இல்லை என்று போட்டியில் இப்போது....
அண்மையில் இணைய திருமண தகவல் தளத்தில் பார்த்தது...
பெண் படித்து .....இளநிலை......வீட்டில் சும்மாதான் இருக்கிறார் .....
அவளுக்கு..அவள் வைத்த விலை...மாதம் லட்சம் ரூபாய் மட்டுமே...
இன்னொரு பெண் வருட வருமானம் அறுபது லட்சத்திற்கு
குறையமால் இருக்க வேண்டுமாம்......
அதாவது...மாதம் ஐந்து லட்ச ரூபாய் ........
நான் அவர்களை...குறை சொல்லவில்லை.....
இருந்தாலும்....துணிகடையில்....சேலை மீது ஓட்டும்...
விலை ஒட்டி போல்....இதை குறிப்பிடத்தான் வேண்டுமா????????
கேட்பதற்கே அசிங்கமாக இருக்கிறது....
சொல்வதர்கேன் இல்லையோ தெரியவில்லை....
முன்பெல்லாம் நல்ல குடும்பம்..
நல்ல பையன் என்றெல்லாம் சொல்வார்கள்..
இப்போதெல்லாம்....நீ யாராக வேண்டுமானாலும்
இருந்துவிட்டு போ ....
மாதம் எவ்வளவு தருவாய்....
இவ்வளவு தரவேண்டும்....என்று
அவளுக்கு அவளே விலை பேசி விற்கின்றாள்
சரி நிரந்தரம் இல்லாத வாழ்கையில் ...
நிரந்தர வேலை கேட்டது பரவா இல்லை...!!!!!
இந்த விலை...எவ்வளவு நாளாம்??
ஒரு வேளை.....மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கும்
ஒருவன் திருமணம் செய்து கொண்டு... தவிர்கமுடியாத
காரணத்தால் கட்டாய பணி நீக்கம் செய்யபட்டால்........
என்ன செய்வாள்???....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக