அன்று
அவ னவள் வேறன்று அவர்கள் என்று அவள் சொன்னாள் அன்று
அவலவன் வேராகி வீழ்ந்துபோனான் மரமாகி அவளன்பில் அன்று
அவளே அவன் வேரன்றி வீழ்ந்தான் வேரிலா மரமாய்.........இன்று
அவனன்று நிலவென்றான் அவள் நகையுடன் மிகைஎன்றாள்...
நிலவொன்று இலவாகிபோனது .........இன்று
தாய் தந்தையுண்டு உடன் பிறந்த உறவுண்டு எல்லாமும்
உனக்கில்லை ஈடென்று சொன்னாள் அன்று
நிலவிலா இரவொன்று உண்டு நீயிலாததில்லை உன் நினைவிலாததும் என்றாள்,
சாவும் கூட கடுகளவு, கடலளவாய் உன் அன்பு முன் என்றாள்...
நீ என் உயிரென்றாள், அன்று
நான் இறந்து கொண்டிருக்கிறேன் இன்று........................
-மனம்